அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணர் திருக்கோவில் – கரூர் என்பதை பற்றி புரிதல்
தலவரலாறு :
சுசர்மா என்னும் பக்தன் தனது மனைவியுடன் குழந்தை பாக்கியம் வேண்டி திருப்பதிக்கு யாத்திரை மேற்கொண்டார். யாத்திரையின் போது காவிரிக்கரையில் தங்கி இருந்தார். அப்போது நாரதர் கனவில் தோன்றி திருமக்கூடலூர் என்ற கூடுதுறைக்கு செல்லுங்கள்.
அங்கு உங்களைச் சிலர் வரவேற்பர் என்று சொன்னதைத் தொடர்ந்து அங்கு சென்றனர். அங்கு தச்சர்கள் இருந்தனர்.
அவர்கள் சுசர்மாவை வரவேற்று கல்வேலை நடக்கும் இம்மலைக்கு அழைத்துச் சென்ற போது மலையில் பிரகாசமான ஒளி ஒன்று கிளம்பியது.
இதனையடுத்து பாறை பிளவுண்டு பெருமாள் காட்சி தந்தார். கேட்ட வரத்தையும் அருளையும் தந்தார். இவ்வாறு பெருமாள் இங்கு எழுந்தருளியுள்ளார்.
ஆதிசேசனுக்கும், வாயு பகவானுக்கும் நடந்த போட்டியில் சிதறிய திருவேங்கடமலையின் ஒரு பகுதிதான் தான்தோன்றிமலையாகும்.
இங்கே பக்தர்கள் அனைவரும் வேண்டிய அருளை தந்து கல்யாண வெங்கட்ரமணர் அருள்புரிந்து வருகிறார். இக்கோவில் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
திருத்தலக் குறிப்பு:
சுவாமி : கல்யாண வெங்கட்ரமணர்.
உற்சவர் : ஸ்ரீநிவாசர்.
அம்பாள் : ஸ்ரீதேவி பூமிதேவி.
ஊர் : தான்தோன்றிமலை.
தலச்சிறப்பு :இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தலச்சிறப்பு :
இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கே கல்யாண வெங்கட்ரமணர் திருக்கல்யாண வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
இந்த கோவில் 3000 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவிலாகும்.
இந்தக் கோவிலுக்கு தென்திருப்பதி என்ற சிறப்பு பெயரும் உண்டு.
திருவிழாக்கள் :
சித்திரை, புரட்டாசி, மாசி பெருந்திருவிழா நடைபெறுகிறது.
பிரார்த்தனை :
குழந்தை பாக்கியம் பெற, கல்வியில் சிறப்பிடம் பெற, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, நோய் தீர இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
நேர்த்திக்கடன் :
பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து, துளசிமாலை, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கின்றனர்.
முக்கிய விபரங்கள்: | |
Official Website | Click here to open link in new tab |
Route Map | Click here to link open in new tab |
Pooja Timings | |
Viswaroopam | 06:00 am to 06:30 am IST |
Kaala Shanthi Pooja | 08:00 am to 08:30 am IST |
Thirumanjanam | 11:00 am to 12:00 pm IST |
Uchchi Kaala Pooja | 12.00 pm to 12:30 pm IST |
Sayaratchai | 06:30 pm to 7:00 pm IST |
Fees Details | |
Thirumanjanam | Rs. 60.00 |
Ashtothiram | Rs. 2.00 |
Sahasranamam | Rs. 10.00 |
Perumal Gold Kavasam | Rs. 500.00 |
Perumal Silver Kavasam | Rs. 100.00 |
Hanumar Gold Kavasam | Rs. 200.00 |
Hanumar Silver Kavasam | Rs. 50.00 |
Garudazhwar Silver Kavasam | Rs. 50.00 |
Puspa Ticket | Rs. 10.00 |
Ear Boring | Rs. 10.00 |
Patham Ticket | Rs. 5.00 |
Thaligai Ticket | Rs. 25.00 |
Sevai Ticket | Rs. 2.00 |
Special Sevai | Rs. 5.00 |
Special Dharsan | Rs. 10.00 |
Speed Dharsan | Rs. 50.00 |
Marriage Registration fee | Rs. 300.00 |
மேலும் சில திருக்கோவில்:
1.) அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – காங்கேயம்
2.) அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில் குச்சனுார்-தேனி
3.) வீட்டில் பணம் சேர வேண்டுமா, இதோ சில எளிய பரிகாரங்கள்