தல வரலாறு
வெள்ளியங்கிரி மலை மீது மற்றும் மலை அடிவாரத்தில் இருக்கும் சிவன் கோவில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக ௧ருதப்படுகின்றன.
இங்கிருக்கும் சிவபெருமானை “வெள்ளியங்கிரி ஆண்டவர்” என்றும் அம்பாளை “மனேன்மணி அம்மையார்” என்றும் அழைக்கபடுகிறது.
வட கைலாயம் என்பது வட துருவ பகுதியில் இருப்பது என்றும் கடலின் நடுவில் இருப்பது என்றும் கூறப்படுகிறது. மத்திய கைலாயம் இமயமலையில் இருக்கிறது. தென்-கைலாயம் என்று போற்றப்படும் வெள்ளிங்கிரி மலை அணைத்து ஜீவராசிகளும் வணங்கும் வண்ணம் இருக்கிறது. இங்கு வணங்கினால் இமயமலையில் வணங்கிய பலன் கிடைக்கும்.
பஞ்ச பாண்டவர்களின் ஒருவனான அர்ஜூனன் இப்பகுதியில் வந்த போது சிவபெருமான் வேடன் ரூபத்தில் தோன்றி அர்ஜூனனுடன் விளையாட்டாக போர் புரிந்தார்.
இருதியில் தனது உண்மை வடிவத்தில் தோன்றிய சிவபெருமானை வணங்கிய அர்ஜுனனுக்கு தனது பாசுபத ஆயுதத்தை சிவபெருமான் அளித்து ஆசிர்வதித்தார்.
அங்கிருக்கும் ஏழு மலைகளும் உடலில் இருக்கும் ஏழு யோக சக்கரங்களை குறிப்பதாக கூறுகிறார்கள்.
தல சிறப்பு
இங்கு நாள்பட்ட நோய்களுக்கும், தீராத நோய்களுக்கும் தீர்வு கிடைப்பதாக நம்பப்படுகிறது.
கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் திருமேனிகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. விரிந்த தாமரை மலரின் நடுவே உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கப்பட்டுள்ளது.
விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசி சிற்பங்களை படைப்பு சிற்பங்களாக நேர்த்தியாக வடித்துள்ளனர். மலர்ந்த தாமரையின் மேல் உள்ள பீடத்தில் நவகிரஹ நாயகர்கள் வட்ட வடிவில் நின்ற கோலத்தில் அருள்கின்றனர்.
இதை சுற்றி வந்து வணங்கும் போது நவகிரஹங்களையும் ராசிகளையும் தொழுத பலன் கிடைக்கும்.
வெள்ளிங்கிரி மலை கோவில்
இங்கு 7 மலைகள் இருக்கிறது. இவை நம் உடம்பில் உள்ள 7 சக்கரங்களை குறிக்கின்றது. அவை மூலாதாரம், ஸ்வாதிஷ்டான, மணிப்பூரக, அனகதா, விஷுதி, மற்றும் அஃன்ய. ஏழாவது மலை ஈசன் வீற்றிருக்கும் சகஸ்ர சக்கரம் ஆகும். இதற்கு சிவஜோதி மலை என்றும் பெயர் உண்டு. இந்த மலை கடல்மட்டத்தில் இருந்து 6000 அடி உயரம் இருக்கிறது. கார்த்திகை மற்றும் சித்திரை பௌர்ணமி நாட்களில் மலை ஏற தமிழக வனத்துறை மூலம் அனுமதிக்கப்படுகிறது. 14 – 50 வயது வரை உள்ள பெண்கள் அடிவாரத்தில் ஈசனை தரிசிக்கலாம். ஆண்கள் மட்டுமே 7 மலை ஏற அனுமதிக்கப்படுவர்.
கைதட்டி சுனை இரண்டாவது மலையிலும் மற்றும் பாம்பாட்டி சுனை மூன்றாவது மலையிலும் உள்ளது. ஐந்தாவது மலை திருநீருமலை என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் ராமாயணம் மற்றும் மஹாபாரத காலங்களில் பார்வதி தேவியார் தியானம் செய்ததாக வரலாறு சில உள்ளது. ஆறாவது மலையில் உள்ள ஆண்டி சுனை மானசரோவர்க்குக்கு இணையாக போற்றப்படுகிறது. இங்கு பக்தர்கள் நீராடலாம்.
ஏழாவது மலை பார்க்க எளிதாக இருக்கலாம், அனால் மிக செங்குத்தான பாதையாக உள்ளது. இங்குதான் ஏன் அப்பன் ஈசன் அமர்ந்திருக்கிறார். இது 6 அடி குகை, அதற்குள் பஞ்சலிங்கம் வடிவில் இறைவன் அருளிபாலிக்கிறார்.
இன்றும் இங்கு அரூப வடிவில் சித்தர்கள் பலர் வலம் வருவதாக தகவல்கள் பல உள்ளன. உடல் வலிமை மற்றும் மன வலிமை உள்ளவர்கள் மட்டுமே இங்கு மலையேற முடியும்.
திருவிழாக்கள்
தமிழ் வருட பிறப்பு, சித்திராபௌர்னமி, கார்த்திகை மாதம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
கோவில் அமைவிடம்
வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூண்டி என்கிற ஊரில் அமைந்துள்ளது.
பேருந்து வசதி
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊர் வரை பேருந்து வசதி இருக்கிறது.
திறக்கும் நேரம்
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
0422 – 2615258 | 230 0238