யுக வருடங்கள் பற்றி பார்த்தோம், யுகத்துக்கும் முந்தியது கல்பமாகும். யுகங்களையும் விட பெரியதாகும்.
மொத்தம் 6 – கல்பங்கள் என்று கூறப்படுகிறது.
- கூர்ம கல்பம்
- பார்த்திவ கல்பம்
- ஸாவித்திரி கல்பம்
- பிரளய கல்பம்
- வராஹ கல்பம்
- பிரம்ம கல்பம்
தற்போது நடைபெறுவது வராஹ கல்பமாகும். இதுவரை புராணங்களில் உள்ள காலக்கணக்கீடுகளைப் பற்றி பார்த்தோம்.
வருடங்களின் வகைகள்
நடைமுறையில் பஞ்சாங்கங்களில் சிலவகை வருடங்கள் உள்ளது. அவை
- பிரபவாதி வருடம்
- கொல்லம் வருடங்கள்
- ஹிஜ்ரி வருடங்கள்
- ஆங்கில வருடங்கள்
- பஸலி வருடங்கள்
- குடியரசு வருடங்கள்
- சாலிவாகன வருடங்கள்
- கலியுகாதி வருடங்கள்
- வட இந்திய சக வருடங்கள்
- திருவள்ளுவர் வருடங்கள்
- காந்தி வருடங்கள்
மேலும் சகாப்தம் என்பது சிறப்பாக ஆட்சி செய்த அரசர்கள் மற்றும் மகான்கள் தோற்றம் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும்.
சகாப்தங்களின் வகைகள்
- சாலிவாகன சகாப்தம்
- விக்கிரம சகாப்தம்
- கிருஷ்ண யாப்தம்
- போஜராஜ சகாப்தம்
- புத்த சகாப்தம்
- மகாவீர் சகாப்தம்
- ஸ்ரீ பாண்டவாப்தம்
- செளரவிஜயாப்தம்
- கலியப்தம்
- பிரதாப் ருத்ராட்சம்
- ஸ்ரீ ராமானுஜயாப்தம்
- ஜகத்குரு சங்கராச்சாரியாராப்தம்
- ஸ்ரீ மத்வாச்சாரியாப்தம்
- சேக்கிழாராப்தம்
- ஸ்ரீ ராம் தேவாப்தம்.
இவை தவிரகாலச் சக்கரம் இராசி மண்டலத்தில் கணிக்கப்பட்ட ஜோதிட வருடங்கள்.
சோதிட வருடங்கள்
1.) செளரமானம் (அ) செளர வருடம்: இது சூரியனை அடிப்படையாக கொண்டது.
2.) சாந்திர வருடம்: இது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது.
3.) சாதன வருடம்: இது பூமியை அடிப்படையாகக் கொண்டது.
4.) நட்சத்திர வருடம்: இது சந்திரன் கடக்கும் நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டது.
5.) பிருகஸ்திய வருடம் (அ) பார்ஹஸ்திய வருடம்: இது குரு பகவானை அடிப்படையாகக் கொண்டது.
6.) பிரபவாதி வருடம்: இது நடைமுறையில் உள்ள பிரபவ வருடம் முதல் அட்சய வருடம் வரை உள்ள 60, வருடங்களை அடிப்படையாகக் கொண்டது.
இது பற்றிய விபரங்களை இனிவரும் பகுதிகளில் அடுத்தடுத்து தொடர்ந்து காண்போம்.
ஜாமம்
பஞ்சாங்கத்தில் வாரம் என்ற நாளைத் தொடர்ந்து காலக்கணக்கீட்டுக்கு அடுத்தபடி மணியும், நாழிகையும் வருகிறது. முற்காலத்தில் கடிகார மணி வழக்கில் இல்லாத காலத்தில் ஜாமம் என்ற காலக்கணக்கீடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
பஞ்ச பட்சி சாஸ்திரம் எனும் ஜோதிட அங்கம் ஜாமம் என்ற காலக்கணக்கீட்டின் அடிப்படையில் தான் உள்ளது.
ஒரு நாளுக்கு 10 – ஜாமங்களாகும்
- பகல் பொழுது 5 – ஜாமங்களாகவும்
- இரவுப் பொழுது 5 – ஜாமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
பகல் பொழுதின் 12 மணி நேரம் அல்லது 30 நாழிகையை, 5 பங்காககப் பிரித்தால், ஒரு ஜாமத்துக்கு 2 மணி, 24 நிமிடங்கள் அல்லது 6 நாழிகை அளவாக வரும்.
இதேபோல் இரவுப் பொழுது 12 மணி நேரம் அல்லது 30 நாழிகையை, 5 பங்காககப் பிரித்தால், இரவு நேர ஒரு ஜாமம் 2 மணி, 24 நிமிடங்கள் அல்லது 6 நாழிகைகள் அளவாக வரும்.
ஆகவே ஒரு நாளின் 24 மணி நேரத்தை, 10 பங்காக்கினாலும், 1 ஜாமத்துக்கு 2 மணி 24 நிமிடங்கள் வரும்.
இது வரை யுகம் முதல் ஜாமம் எனும் யாமம் வரை பார்த்தோம். இனி அடுத்ததாக மணி நாழிகை மற்றும் அதன் உட்பிரிவுகளைப் பற்றிய விபரங்களை காண்போம்.
1 கடிகார மணி: 60 நிமிடங்களை கொண்டதாகும்.
1 நிமிடம்: 60 விநாடிகளை கொண்டதாகும்.
1 நாழிகை: 60 விநாடி அல்லது விநாழி.
1 விநாடி: 60 கற்பனை அல்லது நெடில்.
இதன் விரிவாக்கம் தெளிவாக காண்போம்.
1 அல்பம் – நாழிகை
60 அல்பம் – 1 த்ருடி
60 த்ருடி – 1 தற்பரை
60 தற்பரை – 1 விநாழிகை
60 விநாழிகை – 1 நாள்
7 நாள் – 1 வாரம்
30 நாள் (அ) 1 மாதம் – 4 வாரம்
12 மாதங்கள் (அ) 1 வருடம் – 52 வாரம்
2 கடிகார மணி – நாழிகை
60 நொடி (செக்கண்டு) – 1 நிமிடம் (மினிட்)
60 நிமிடம் (மினிட்) – 1 மணி (ஹவர்)
1 மணிக்கு – 2 1/2 நாழிகை
1 நிமிடத்துக்கு – 2 1/2 விநாழிகை
1 நொடிக்கு – 2 1/2 தற்பரை
1 நாழிகைக்கு – 24 நிமிடங்கள்
3 ராசிக்கணக்கீடு
60 தற்பரை – 1 வில்
60 வில் – 1 இலி
60 இலி – 1 பாகை
30 பாகை – 1 இராசி
12 இராசி – 1 கோளம் (ராசிச்சுற்று)
60 மினிட் – 1 டிகிரி