கண்டாந்தம் நட்சத்திரங்கள், அபிஜித் நட்சத்திரம், என்றால் என்ன?

பதிவேற்றம் செய்த நாள் March 11, 2022   |   ஆசிரியர் தேவி பெரியநாயகி

0 கருத்துக்கள்

கண்டாந்தம் என்றால்…?

நீர் மற்றும் நெருப்பின் சந்திப்பு கண்டாந்தம் ஆகும். ராசி மண்டலத்தைச் சந்திரன் சுற்றி வருகிறது.

அவ்வாறு சுற்றி வரும் காலத்தில் சில குறிப்பிட்ட ராசி – நட்சத்திரங்களில் சந்திரன் இருக்கும் போது ஒரு பிறப்பு (ஜனனம்)  நிகழ்ந்தால் அது அசுபமாக கருதப்படுகிறது.

  1. உஷ்ணகடிகை
  2. விஷகடிகை
  3. கண்டாந்தம்

போன்றவை அத்தகைய காலங்களில் சில.

 

கண்டாந்த வேளைகளில் பிறந்தவர் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. மேலும் ஜாதகரை மட்டுமின்றி அவரது பெற்றோர் உறவினரைக் கூட பாதிக்க வல்லது.

கண்டாந்தரத்தில் பிறப்பு நிகழுமானால் அதற்குறிய பரிகார சாந்தி ஹோமங்கள் செய்து கொள்வது நல்லது.

கண்டம் – அந்தம்.

என்ற இருவார்த்தைகள் சேர்ந்து உருவானது கண்டாந்தம்.

 

ராசிமண்டலம்:

ராசிமண்டலம் 3 – கணுக்களாக இணைக்கப்பட்டுள்ளது.

1 – ஆம்  கணு மேஷத்திலும்

2 – ஆம் கணு சிம்மத்திலும்.

3 – ஆம் கணு தனுசுவிலும் உள்ளது.

 

இந்த கணுப் புள்ளிகளை பிரம்மாவின் கண்கள் அல்லது விஷ்ணுவின் தொப்புள் எனவும் கூறுவர்.

ஏனெனில் இந்தப் புள்ளிகள் ஆரம்பப் புள்ளிகளாக அமைகின்றன கண்டாந்த புள்ளிகள் பற்றி மேலும் அறிய பொருட்கள் / உயிர்கள் உருவாவது பற்றி அறிந்திருக்க வேண்டும்.

  • நெருப்பு
  • பூமி
  • காற்று
  • நீர்

ஆகிய நான்கும் இணைந்தே உற்பத்தி நடைபெறுகிறது. இது ஒரு தொடர் சுழற்சி முறையில் அமைகிறது.

1.) இதுவே மேஷத்திலிருந்து நெருப்பு ராசியில் தொடங்கி நிலம் ரிஷபராசி, காற்று மிதுனராசி, நீர் கடகராசியில் நிறைவடைகிறது.

2.) சிம்மத்தில் நெருப்பு ராசியில் மறுபடி தொடங்கி கன்னி நிலம் ராசி, காற்று துலாம் ராசி, நீர் விருச்சிக ராசியில் நிறைவடைகிறது.

3.) மறுபடியும் நெருப்பு தனுசு ராசி தொடக்கம் ஆகி, நிலம் மகர ராசி, காற்று கும்பராசி, நீர் மீனராசி என முடிவடைகிறது.

அதாவது இந்த சுழற்சி முறை மேஷத்தில் (அஸ்வினி நட்சத்திரம்), சிம்மத்தில் (மகம் நட்சத்திரம்), தனுசில் (மூலம் நட்சத்திரங்களில்) தொடங்கி …

முறையே கடகம் (ஆயில்யம்), விருச்சிகம் (கேட்டை), மீனம் (ரேவதி) நட்சத்திரங்களில் நிறைவடைகிறது.

எனவே இந்த ஆரம்ப புள்ளிகள் ஓர் உற்பத்தி ஆரம்பமாவதையும் நிறைவுப்புள்ளிகள் அந்த உற்பத்தி நிறைவடைவதையும் குறிக்கின்றன.

உற்பத்தி புள்ளிகள் 3 – ம் அசுவினி மகம் மூலம்.

நிறைவுப்புள்ளிகள் 3 – ம் ஆயில்யம் கேட்டை ரேவதியுமாக அமைகின்றன.

 

இவற்றில்,

ஆரம்ப நட்சத்திரங்களின் 1 -வது பாதமும் (அசுவினி, மகம், மூலம்),

நிறைவு (அழிவு) நட்சத்திரங்களின் 4 – வது பாதமும் (ஆயில்யம், கேட்டை, ரேவதி)

கண்டாந்த நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.

எனவே கண்டாந்த நட்சத்திரங்களில் நீருக்கும் நெருப்புக்கும் இடையே ஒரு தொடர்பு நேர்கிறது எனவே அந்த நட்சத்திரங்களின் மேற்கண்ட பாதங்களில் பிறப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

 

 

நட்சத்திரகண்டாந்தம்:

நட்சத்திரங்களில் சந்திரன் தங்கும் காலம் தோராயமாக 60 – நாழிகைகள் என அறிவோம். எனவே கண்டாந்த தோஷம் எவ்வளவு நேரம் அமைகிறது என்பதை மேற்சொன்ன கண்டாந்த நட்சத்திர பாதங்களில் சந்திரன் எத்தனை மணிநேரம் தங்கியிருந்தது என்பதை அறிவதே ஆகும்.

இவ்வாறான நேரம் உற்பத்தி நட்சத்திரங்களுக்கு 3 – நாழிகை என்றும், நிறைவு (அழிவு) நட்சத்திரங்களுக்கு 5 – நாழிகை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த நாழிகை கணக்கை நிமிடக்கணக்கில் எடுத்துக்கொண்டால் 66.67 – நீர் ராசி நிறைவுப் புள்ளிகளின் கண்டாந்தம்:

40 – நெருப்பு ராசி உற்பத்தி் புள்ளிகளின் கண்டாந்தம் ஆகும்.

 

கண்டாந்தத்தின் வகைகள்:

பிரிவு 1:

ஜனனம் நிகழ்ந்தது பகல்பொழுதில் என்றால் அது பித்ரி (தந்தை) கண்டாந்தம் ஆகும்.

இரவு எனில் மாத்ரி (தாய்) கண்டாந்தம் எனப்படும்.

 

பிரிவு 2:

ரேவதி அஸ்வினி சந்திப்பில் பிறப்பது ஸ்வகண்டாந்தம் ‘ஸ்வ’ என்பதற்கு  ‘தான்’ என்று பொருள்.

ஆயில்யம் மகம் சந்திப்பில்  பிறப்பது மாத்ரி (தாய்) கண்டாந்தம்.

மூலம் கேட்டை சந்திப்பில் பிறப்பது பித்ரி (தந்தை) கண்டாந்தம் என்பர்.

 

பிரிவு 3:

கேட்டையின் கடைசி 2 – நாழிகைகளும் மூலத்தின் முதல் 2 – நாழிகைகளும் சேர்ந்தது அபுக்த கண்டாந்தம் எனப்படும்.

நாரதர் மகரிஷி. இதைப்பற்றி குறிப்பிடும் போது இந்த குழந்தையின் மீது எந்த நம்பிக்கையும் கொள்ளவேண்டாம் (உயிர் வாழாது) அப்படி வாழ்ந்தால் அந்த குழந்தையின் முகத்தை தந்தையார் 8, வருடம் பார்க்க கூடாது என்கிறார்.

ஏனெனில் இது பித்ரி (தந்தை) கண்டாந்தம்.

27 – நாட்கள் பார்க்க கூடாது என்றும் ஒரு கருத்து உண்டு.

இதற்கு தேவைப்படும் பரிகாரங்கள் செய்திட வேண்டும்.

 

பிரிவு 4:

மூல நிவாசம் (மூலத்தின் வீடு என்று பொருள்).

மூல நட்சத்திரம் கீழ்கண்ட மாதங்களில் கீழ் கண்ட உலகில் வசிப்பதாக கருதப்படுகிறது.

  1. வைகாசி, ஆனி, மார்கழி, பங்குனி – பாதாள உலகம் (நரகம்)
  2. சித்திரை, ஆவணி, கார்த்திகை, தை – ம்ருத்யு உலகம் (இறந்தவர் உலகம்)
  3. ஆடி, புரட்டாசி, ஐப்பசி, மாசி – (சுவர்க்க உலகம்)

மூலம் நட்சத்திரம் இந்த உலகங்களில் வசிக்கும் போது கண்டாந்த நேரத்தில் ஜனனம் நிகழுமானால் ம்ருத்யு உலகம் எனில் அதிக தீமைகளும்.

மற்ற இரு லோகங்களில் தீமைகள் குறைந்தும் இருக்கும்.

மூலம் நட்சத்திரம் ஸ்வர்க்கம், பாதாள, ம்ருத்யு லோகங்களில் இருந்தால் ஜாதகனின் லக்னம் முறையே சர, ஸ்திர, உபய ராசிகளாக அமையும்.

எனவே இதை வைத்து ஜாதக லக்னம் சர, ஸ்திர, உபயத்தில் எது என்பதையும் அவருடைய கண்டாந்தம் கேட்டை இறுதி பாகமா…? மூலம் முதல் பாகமா…? என்பதைப் பொறுத்தும் பலன் சொல்ல முடியும்.

 

கண்டாந்த பலன்கள்:

லக்னம் ஒருவரின் மதிநுட்பத்தை ஆளக்கூடியது. ராசி (சந்திரன்) உடலை ஆள்வது. எனவே லக்னம் கண்டாந்தம் ஏற்பட்டால் ஜாதகரின் அறிவில் குறைபாடு இருக்கும் எனவும்.

ராசி கண்டாந்தம் ஆயுளை பாதிப்பதாகவும் கொள்ளலாம்.

 

பரிகாரங்கள்:

ராசி கண்டாந்தம் ஏற்பட்டால் ராசி அதிபதியையும், லக்ன கண்டாந்தம் ஏற்பட்டால் லக்னாதிபதியையும் வணங்க வேண்டும்.

அவை கண்டாந்த தீமைகளை அழிக்கும்.

எந்த லக்னம் (ராசி) பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த லக்னம் (ராசி) தேவதை ‘அதி தேவதை’ எனப்படும்.

எந்த லக்னம் (ராசி) பாதிப்பை ஏற்படுத்துகிறதோ அதன் தேவதை ‘பிரதியதி தேவதை’  ஆகிறது.

 

நட்சத்திர தேவதைகள்:

எண் –  நட்சத்திரம் –  தேவதை,

1 – அஸ்வினி – அஸ்வினி குமாரர்கள்.

2 – பரணி – எமன்.

3 – கார்த்திகை – அக்னி.

4 – ரோகிணி – ப்ரஜாபதி,பிரம்மா.

5 – மிருகசீரிஷம் – சந்திரன்.

6 – திருவாதிரை – ருத்ரன்.

7 – புனர்பூசம் – அதிதி.

8 – பூசம் – ப்ருஹஸ்பதி

9 – ஆயில்யம் – சர்ப்பம்.

10 – மகம் – பித்ருக்கள்.

11 – பூரம் – பகன், பாக்யம்

12 – உத்திரம் – ஆர்யமான்.

13 – ஹஸ்தம் – சவிதா , சாவித்திரி.

14 – சித்திரை – விஸ்வகர்மா, துவஷ்டா.

15 – சுவாதி – வாயு.

16 – விசாகம் – அக்னி , இந்திரன்.

17 – அனுஷம் – மித்ரன்.

18 – கேட்டை – இந்திரன்

19 – மூலம் – நிருதி.

20 – பூராடம் – அபஸ், ஜலதேவதை.

21 – உத்திராடம் – விஸ்வதேவர்கள்.

அபிஜித் – ஹரி

22 – திருவோணம் – விஷ்ணு.

23 – அவிட்டம் – அஷ்ட வசுக்கள்.

24 – சதயம் – வருணன்.

25 – பூரட்டாதி – அஜேகபாதன்.

26 – உத்திரட்டாதி – அஹிர்புன்யா, அகிர்புத்னியன்.

27 – ரேவதி – பூஷன், பூஷா

 

அபிஜித் நட்சத்திரம்:

அபிஜித் நட்சத்திரம் என்பது இடைப்பட்ட நட்சத்திரம் அது  உத்திராடம் மற்றும் திருவோணம் சிரவண நட்சத்திரங்களுக்கு இடையில் உள்ளது.

  • ஒரு நட்சத்திரத்தின் அளவு 13 பாகை, 20 கலை என்பது ஆகும்.
  • ஒரு நட்சத்திரத்தின் பாதம் அளவு 03 பாகை, 20 கலை ஆகும்
  • அபிஜித் நட்சத்திரத்தின் அளவு இந்த அளவைவிட குறைவானது.

அதற்கான அளவு உத்திராடம் மற்றும் திருவோண நட்சத்திரங்களின் அளவிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது.

அதன் முறை வருமாறு உத்திராடத்தின் முதல் 3 பாதங்களின் அளவையே நான்கு பாதங்களுக்குமாக பிரிக்கப்பட்டு தரப்படுகிறது.

3 ஆம் பாத அளவு 4 ஆம் பாதத்திற்கும் இதனை பிரிக்க மீதமுள்ள ஒரு பாதம் உத்திராடத்தின் ஒரு பாதம் அபிஜித் நட்சத்திரத்திற்கு வழங்கப்படுகிறது.

உத்திராடம் நட்சத்திரத்தின் 4 ஆம் பாதமும் திருவோணம் நட்சத்திரத்தின் ஆரம்பத்தின் பாகை 00.54 – உள்ள பகுதி அபிஜித் நட்சத்திரம் ஆகும்.

அதே போல சிரவணம் (திருவோணம்) நட்சத்திரத்திரன் ஆரம்பத்தில் உள்ள நட்சத்திர பாத அளவும் அபிஜித்திற்கு  வழங்கப்படுகிறது.

எவ்வாறு எனில். திருவோண நட்சத்திரம் அளவான 13 பாகை, 20 கலை 15 – ஆக பிரிக்கப்படுகிறது.

1 – பிரிவின் அளவு 53 கலை வரும். இந்த அளவு அபிஜித்திற்கு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே உத்திராடம் கொடுத்தது 1 – பாத அளவு 03, 20 : கலை தற்போது திருவோணம் தருவது 1/15 ல் பாகம் அபிஜித்தின் அளவு மொத்தம் 54 கலைகள்.

அபிஜித்துக்கு விட்டுக்கொடுத்த பின் திருவோண நட்சத்திரத்தின் அளவு. 13, 20 ; 54 – 12 , 26 : ஆகும்.

[page_section template=’1′ position=’default’ shadow=’#1e73be’]

இது பற்றிய சந்தேகங்கள் இருந்தால்  கேள்விகள் வரவேற்கப்படுகின்றன.

ஜோதிஷ கலைஞான சரஸ்வதி

திருப்பூர். ஆர். எஸ். பழனிதுரை

செல் : 9659969723 – 8667700466.

[/page_section]

1Shares

கட்டுரை ஆசிரியர்: தேவி பெரியநாயகி

தேவி பெரியநாயகி அவர்கள் இந்த வலைதளத்தின் முதன்மை ஆசிரியர்களில் ஒருவர். இவர் தற்போது தமிழக கோவில்கள் பற்றி நேரில் சென்று ஆராய்ந்து, உண்மை தன்மை அறிந்து இந்த கட்டுரைகள் எழுதுகிறார். மேலும் இவர் பற்றி தெரிந்து கொள்ள இவரது முகநூல் பக்கத்தை தொடரவும்.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: கண்டாந்தம் நட்சத்திரங்கள், அபிஜித் நட்சத்திரம், என்றால் என்ன?

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
1Shares