நட்சத்திர நாளுக்கும் சூரிய நாளுக்கும் உள்ள வித்தியாசங்கள் | ஜோதிட சாஸ்திரம் பாகம் 08

பதிவேற்றம் செய்த நாள் October 11, 2023   |   ஆசிரியர் திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

0 கருத்துக்கள்

இந்தப் பதிவில் பூமி, சூரியன் மற்றும் நட்சத்திரங்களை சுழல ஆகும் காலம், அதிலிருந்து கணக்கிடுப்படும் சூரியன் மற்றும் நட்சத்திர நாள் கணக்குகளை பார்ப்போம்.

நட்சத்திர நாள்

பூமியில் இருந்து பலகோடி கிலோமீட்டர் தொலைவில் நட்சத்திர கூட்டம் உள்ளது. நட்சத்திரங்களுக்கு ஒரு நாளில் ஏற்படும் இடமாற்றத்தின் அளவு மிகமிக குறைவாகவே இருக்கும். இதனால்தான் நட்சத்திரங்கள் பொதுவாக் நிலையானவை என்றும் கூறுவர்.

நட்சத்திர நாளுக்கும் சூரிய நாளுக்கும் உள்ள வித்தியாசங்கள்

நட்சத்திர நாள் கணக்கு

பூமியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு நபர் உள்ளார் என வைத்துக் கொள்வோம். அந்த நபரின் தலைக்கு நேர் மேலே ஒரு நட்சத்திரம் உள்ளதாக் எடுத்துக்கொள்வோம்.

இப்பொழுது நட்சத்திரமும் அந்த நபரும் நேர்கோட்டில் உள்ளனர். இந்த நிலை அப்படியே தொடருமா? இல்லை. இது ஏன் என்றால், பூமி சுழன்று கொண்டே இருக்கிறது. அதனால் நேரம் ஆக ஆக நட்சத்திரத்திற்கும் அந்த நபருக்கும் இருந்த கோண அளவு மாறிக்கொண்டே இருக்கும்.

இப்படி சுழலும் பூமி, மீண்டும் பழைய நிலையை அடையும் பொழுது, அந்த நபரும் நட்சத்திரமும் மீண்டும் நேர்க்கோட்டில் வருவார்கள். இதற்கு ஆகும் நேரம்தான் 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடி. இங்கு நட்சத்திரம் நிலையாக ஒரே இடத்தில் இருப்பதால், பூமி ஒரு நட்சத்திரத்தை சுழல எடுத்துக்கொள்ளும் கால அளவே 23 மணி 56 நிமிடங்கள் 4 வினாடி.

உதாரணமாக, இன்று இரவு 8 மணிக்கு ஒரு நட்சத்திர கூட்டத்தை உங்கள் தலை உச்சிக்கு நேர் மேலே பார்த்தால், நாளை இரவு 7.56 மணிக்கு அதே நட்சத்திர கூட்டம் உங்கள் பார்வைக்கு காத்திருக்கும்.

இதனயே ஒரு நட்சத்திர நாள் என்கிறோம். இந்த நட்சத்திர நாள் ஜோதிட கலைக்கும் வானியலுக்கும் அடிப்படை ஆகும்.

‘பூமி’ நிலை

பூமி சூரியனை மையமாகக் கொண்டு தன் பாதையில் சுற்றி வருகிறது. பூமி என்ற நிலையில் நட்சத்திரம், சூரியன் மற்றும் பூமியின் ஒரு குறிப்பிட்ட புள்ளி, இவை மூன்றும் நேர்கோட்டில் உள்ளன. இந்த நிலையில் இருந்து 23 மணி 56 நிமிடங்கள் கழித்து உள்ள பூமியின் நிலையே ‘பூமி’ என்ற நிலையாகும்.

சூரிய நாள்

பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டே சூரியனையும் சுற்றி வருகிறது. இதற்கு ஆகும் கால அளவு 365 1/4 நாட்கள் ஆகும். ஒரு சுற்று அல்லது ஒரு வட்டம் என்றால் ஒரு பாகை (டிகிரி).

360 பாகையை சுற்றி வர 365 1/4 நாட்கள் என எடுத்துக்கொண்டால், பூமி ஒரு நாளில் தன் பாதையில் தோராயமாக 1 பாகை நகர்ந்திருக்கும் ( 360 / 365.25 *1 = 0º 59̀)

ஆகையால் பூமிக்கும் ‘பூமி’க்கும் உள்ள நேர வித்தியாசம் 23 மணி 56 நிமிடங்கள். இந்த கோண வித்தியாசமே ஒரு பாகை.

இப்பொழுது நட்சத்திரமும் பூமியின் ஒரு குறிப்புட்ட புள்ளி ஒரே நேர்கோட்டில் இணையும். ஆனால் சூரியனும் பூமியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியும், முந்திய சூரியன்-பூமியின் ஒரு குறிப்புட்ட புள்ளியின் கோண அளவை அடைய இன்னும் சிறிது நேரம் சுழல வேண்டும்.

இது ஏன் என்றால், நட்சத்திரத்துடன் ஒப்பிடும்போது சூரியன் பூமிக்கு அருகில் உள்ளது. ஏற்கனவே உள்ள 23 மணி 56 நிமிடத்துடன் இன்னும் நான்கு நிமிடங்கள் சேர, 23 மணி நேரத்தில் இந்த இணைதல் ஏற்படும்.

ஆக, ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் பூமியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியும் சூரியனும் ஒரே நேர்கோட்டில் வரும். இதனையே சூரிய நாள் (SOLAR DAY) என்கிறோம்.

சூரிய ஆண்டு

பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால அளவு 365 நாள் 5 மணி நேரம் 49 நிமிடம். இது தோராயமாக 365 1/4 நாட்கள். இதனையே சூரிய ஆண்டு (SOLAR YEAR) என்கிறோம்.

சூரிய ஆண்டின் நட்சத்திர நாள் கணக்குகள்

மேற்கண்ட சூரிய ஆண்டில் உள்ள 365 1/4 நாட்கள் என்பது நட்சத்திர நாட்களா அல்லது சூரிய நாட்களா என்கிற சந்தேகம் வரும். அவை சூரிய நாட்களாகும்.

ஒரு சூரிய ஆண்டின் 365 1/4 நாட்களில், எத்தனை நட்சத்திர நாட்கள் உள்ளது என பார்ப்போம். முதலில் சூரிய ஆண்டின் 365 நாள் 5 மணி 49 நிமிடங்களை முழுவதுமாக நிமிடங்களாக மாற்றிக் கொள்வோம் –

  • 365 நாள் = 365 * 24 = 8760 மணி நேரம்

இத்துடன் மேலே இருக்கும் 5 மணி நேரத்தை சேர்த்தால் 8760+5 = 8765 மணி நேரம்.

  • இது நிமிடங்களாக மாற்ற, 8765 * 60 = 5,25,900 நிமிடங்கள்
  • இதனுடன் 49 நிமிடங்களை கூட்ட 5,25,949 நிமிடங்கள்

எனவே ஒரு சூரிய ஆண்டில் உள்ள மொத்த நிமிடங்கள் 5,25,949 ஆகிறது.

இப்பொழுது ஒரு நட்சத்திர நாளான 23 மணி 56 நிமிடத்தை மொத்த நிமிடங்களாக மாற்றிக் கொள்வோம்

23 மணி = 23*60 = 1380 நிமிடங்கள் (இத்துடன் 56 நிமிடங்கள் கூட்ட 1436 நிமிடங்கள் ஆகும்.)

எனவே ஒரு நட்சத்திர நாளில் உள்ள மொத்த நிமிடங்கள் 1436 ஆகும்.

சூரிய ஆண்டின் நிமிடங்களான 5,25,949 யை நட்சத்திர நாளின் நிமிடங்களான 1436 ஆல் வகுத்தால் ஒரு சூரிய ஆண்டில் உள்ள நட்சத்திர நாட்கள் தெரியும்.

5,25,949 / 1436 = 366 1/4 நாட்கள்

சூரிய ஆண்டில் பூமி சுழல் கணக்கு

365 1/4 நாட்கள் கொண்ட ஒரு சூரிய ஆண்டில் 366 1/4 நட்சத்திர நாட்கள் இருக்கும்.

ஒரு நட்சத்திர நாள் என்பது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளும் காலம் ஆகும்.

எனவே இந்த சூரிய ஆண்டான 365 1/4 நாட்களில் பூமி 366 1/4 தடவை தன்னை சுற்றிக் கொள்ளும்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை

திருப்பூர் ஆர் எஸ் பழனிதுரை அவர்கள் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட பற்றுதலால், ஜோதிடம் பயின்று இன்று பலருக்கு நன்மை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நமது வளைத்ததின் ஜோதிட ஆசிரியராகவும் உள்ளார்.
இவரின் முகநூல் பக்கம் பார்க்க.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: நட்சத்திர நாளுக்கும் சூரிய நாளுக்கும் உள்ள வித்தியாசங்கள் | ஜோதிட சாஸ்திரம் பாகம் 08

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares