ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லாமல் சுகமாக வாழ நவகிரக தோஷம் நிவர்த்தி பரிகாரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஜாதகத்தில் என்ன கிரக நிலைகள் இருந்தாலும் கூட, ஏதேனும் ஒரு கட்டத்தில் அவர்கள் கஷ்டங்களை சந்தித்து தான் ஆக வேண்டும்.
ஜாதகத்தில் கிரக நிலைகள் நல்லபடியாக இல்லையெனில் அதுபற்றி கவலையே பட வேண்டியதில்லை. அப்படிப்பட்ட மனிதர்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ பலவழிகளைக் காட்டி இருக்கின்றனர்.
தோஷம் நிவர்த்தி பரிகாரம் :
நடைபெற்று இருக்கும் கிரக பெயர்ச்சிகளால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருப்பதற்காக தினந்தோறும் அம்மன் மந்திரங்களை பாராயணம் செய்யலாம்.
அம்மன் மந்திரங்களை பாராயணம் செய்ய இயலாதவர்கள், சீர்காழி தலத்தில் அவதரித்து, அம்பிகையினால் ஞானப் பால் புகட்டப்பெற்ற திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் முழுவதையும் மட்டும் பாராயணம் செய்யலாம்.
இவ்வாறு செய்வதன் மூலம் மனிதர்களின் மனமானது மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்கும். தனக்கு வரக்கூடிய பிரச்சனைகளை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு அதை சமாளிக்கக்கூடிய தைரியமும், தன்னம்பிக்கையும் வளரும்.
நவகிரகங்களால் நமக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்பதற்கான புராணக்கதை :
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் திருமறைக்காடு என்னும் தலத்தில் இருந்தபோது, பாண்டிய மகாராணி மங்கையர்கரசியாரிடம் இருந்து திருஞானசம்பந்தருக்கு அழைப்பு வருகிறது. சைவம் துறந்து சமணம் சார்ந்த பாண்டிய மண்ணை திரும்பவும் சைவத்துக்கு மாறச் செய்யவேண்டும் என்பதுதான் அழைப்புக்கான காரணம்.
உடன் இருந்த திருநாவுக்கரசருக்கு உள்ளுக்குள் கலக்கம். திருஞானசம்பந்தர் மதுரைக்குப் போனால், அங்கிருக்கும் சமணர்களால் எதுவும் ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சினார்.
மேலும் அப்போது கிரகநிலைகளும் சாதகமாக இல்லை. எனவே, அப்போதைய கிரகநிலைகள் சாதகமாக இல்லை என்று கூறி, திருஞானசம்பந்தரை மதுரைக்குப் போகவேண்டாம் என்று தடுத்தார்.
ஆனாலும் பாண்டிய நாட்டில் சைவத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற காரணத்துக்காக மதுரைக்குச் செல்ல விரும்பிய திருஞானசம்பந்தர், எல்லாம் வல்ல இறைவன் நமக்கு பக்கத் துணை இருக்கும்போது, நவகிரகங்களால் நமக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று கூறி, கோளறு பதிகம் பாடி திருநாவுக்கரசரை சமாதானம் செய்துவிட்டு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். பாண்டிய நாட்டில் சைவம் தழைக்கவும் செய்தார்.
நவகிரகங்களை எத்தனை முறை சுற்றலாம்?
இந்துக்களின் வழிபாட்டுக்குரியதாய் அமைந்த ஒன்பது கிரகங்கள் நவக்கிரங்கள் எனப்படும். இந்திய ஜோதிட நு}லின்படி கோள்கள் ஒன்பது ஆகும். இவை சு+ரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு, கேது என்பனவாகும்.
நவகிரகங்களை வழிபடுதல் மிகத் தொன்மையான வழிபாடாக இருந்துள்ளது. வரலாற்று ஆய்வின்படி புத்தர் காலத்திலும் இந்த வழிபாடு இருந்துள்ளது. இருப்பினும் நவக்கிரகங்களை தனித்தே அக்காலத்தில் வழிபட்டு வந்திருக்கிறார்கள்.
நவகிரகங்களைப் சுற்றி வழிபடும் போது அந்தந்த கிரகத்திற்கும் உரித்தான எண்ணிக்கையில் சுற்றி வழிபட வேண்டும். அதாவது முதலில் ஒன்பது முறை சுற்றி வணங்கிய பின் அந்தக் கிரக அனுக்கிரகத்துக்காக மேலும் விசேஷமாகச் சுற்றி வந்து வழிபடுதல் வேண்டும்.
நவகிரகங்களை எத்தனை முறை சுற்றி வழிபடுவது?
சூரியன் – 10 சுற்றுகள்
சுக்கிரன் – 6 சுற்றுகள்
சந்திரன் – 11 சுற்றுகள்
சனி – 8 சுற்றுகள்
செவ்வாய் – 9 சுற்றுகள்
ராகு – 4 சுற்றுகள் அடிப்பிரதட்சிணம்
புதன் – 5, 12, 23 சுற்றுகள்
கேது – 9 சுற்றுகள்
வியாழன் – 3, 12, 21 சுற்றுகள்
சரியான நவகிரக தோஷம் நிவர்த்தி வழிபாடு செய்து வாழ்வில் மேன்மை நிலையை அடையுங்கள்