ராகு கேது பலன்கள் கிடைக்க செய்ய வேண்டிய செயல்கள்:
ஒரு சமயம் தேவர்கள் பார் கடலில் அமிர்தம் கடைந்தார்கள். பின்பு அதை மகாபிரபு விஷ்ணு மோகினியாக உருமாரி அமிர்தத்தை பகிர்ந்தளிக்க தேவர்களும், அரக்கர்களும் இரு வரிசையில் அமர்ந்தனர்.
மகாபிரபு விஷ்ணு அரக்கர்களுக்கு மதுவையும், தேவர்களுக்கு அமிர்தத்தையும் கொடுக்க நினைத்தார். இதை அறிந்த சுவர்பானு எனும் அரக்கன் தேவராக உருமாரி சூரியன் மற்றும் கந்திரனுக்கும் இடையே அமர்ந்தார்.
இதை அரியாத மகாபிரபு விஷ்ணு அமிர்தத்தை அந்த அரக்கனுக்கு வழங்கும் போது சூரியன் மற்றும் கந்திரன், அரக்கனை காட்டி கொடுத்தனர்.
இதனால் கோபம் கொண்ட மகாபிரபு விஷ்ணு, சுவர்பானு எனும் அரக்கணை இரு துண்டுகளாக கொய்தார். இதன் விளைவாக அரக்கணின் தலை ஒரு பாம்பின் உடலோடும்(ராகு), அரக்கணின் உடல் அதே பாம்பின் தலையோடும்(கேது) இனைந்தது.
இதனாலேயே ராகு கேது உருவானார்கள்.
ராகு கேது பலன்கள் பெற:-
ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப ராகு, கேது பலன்களை வழங்குகிறார்கள். சில பூஜைகள் செய்வதன் மூலம் ராகு கேதுவின் பலன்கள் பெற முடியும்.
1.) அரசு வேம்பு மரம் உள்ள விநாயகரை சனிக்கிழமை ராகு காலத்தில் சுற்றி வந்து வழிபடலாம்.
2.) ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.
3.) அன்னதானம் செய்ய விரும்புபவர்கள் புளி சாதம் அல்லது எலுமிச்சை சாதம் வழங்கலாம்.
4.) ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விநாயகருக்கு அருகம்புல் சாத்தி வழிபடலாம்.
5.) பசுமாட்டிற்கு வாழைப்பழம் கொடுத்து வழிபடலாம்.
6.) பாம்பு புற்றுள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தலாம்.
7.) ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை காலை ஒரு பொழுது மட்டும் விரதம் இருந்து வழிபடலாம்.
8.) வாரந்தோறும் துர்க்கை அல்லது காளிக்கு எலுமிச்சம் பழம் மாலை சாத்தி வழிபடலாம்.
9.) கோவில் யானைக்கு வாழைப்பழம் கொடுக்கலாம்.
10.) தேய்பிறை அஷ்டமியில் கால பைரவருக்கு மாலை சாத்தி வழிபாடு செய்யலாம்.