அனுமன் பக்தர்களை சனி பகவான் ஏன் பாதிப்பதில்லை?

பதிவேற்றம் செய்த நாள் November 27, 2021   |   ஆசிரியர் மயில்ராஜ்

0 கருத்துக்கள்

நவக்கிரகங்களில் வலிமையான கிரகமாகத் திகழ்பவர் சனி பகவான் இவரைப் போல் கொடுப்பவருமில்லை, கெடுப்பவருமில்லை என்பர்.

ஒருவர் முற்பிறவியில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நன்மைகளையும், தீமைகளையும் சனி பகவான் தருவார்.

பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்க்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும்.

அனுமன் பக்தர்களை சனி பகவான் ஏன் பாதிப்பதில்லை?

ஏழரை சனி, மற்றும் சனி மஹாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு விளைவுக்கும் தாக்கங்களை சில முறை ஏற்படுத்தும் காலங்களாகும்.

ஜோதிட சாஸ்திரப்படி சனி பகவான் ஆட்டிபடைப்பார் என்ற கருத்தானது தவறானது மேலும் அவர் பிறந்த ஜாதகத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொருத்து நன்மை தீமை அமையும்.

சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆதுவே ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களை தரும்.

ஒரு மனிதனுக்கு ஜாதக்கப்படி சனி பகவானின் தாக்கம் இருக்கும் போது, அவர் அனுமானை வணங்க வேண்டும், ஏன்னென்றால் இறைவன் அனுமன் ‘சங்கட மோச்சன்” என்று அழைக்கப்படுகிறார்.

அனுமன் தன் பக்தர்களை அனைத்து விதமான சங்கடங்களிலிருந்தும் விடுவிக்கிறார். சங்கடம் என்பதன் பொருள் தொந்தரவுகள் அல்லது பிரச்சனைகள் என்பதாகும்.

இறைவன் அனுமன் குழந்தையாக இருந்த போது சூரியனை சுவையானப் பழம் என்றுத் தவறாகக் கருதி, பிடித்து சாப்பிட முயற்சித்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அச்சமடைந்த சூரிய பகவான், தேவர்களின் தலைவனான இந்திரனிடம் உதவி கோரினார்.

ஆகவே, இந்திரன் தன் வஜ்ஜிராஸ்த்திரத்தால் குழந்தை அனுமனைத் தாக்கியதால் குழந்தை அனுமன் முகத்தில் காயம் ஏற்பட்டது.

இந்த காயமே அனுமன் என்ற பெயருக்குப் பின்னால் உள்ள காரணமாகும்.

குழந்தை அனுமன் மிகுந்த ஆற்றல் மிக்கவராக இருந்தார், எப்போதும் பணிவானவர்.

அவர் சூரிய பகவானிடம் தன்னை மாணவராக ஏற்றுக் கொள்ளும் படி வேண்டினார், ஆனால் சூரிய பகவானோ, தான் நாள் முழுவதும் வானத்தில் பயணிக்க வேண்டி இருப்பதால், எப்பொழுதும் ஓய்வின்றி இருப்பதாகக் கூறினார்.

அதற்குத் தீர்வாக, குழந்தை அனுமன் சூரியன் பகவானின் தேரின் முன் பக்கம் அமர்ந்து தானும் உடன் பயணிக்கத் தொடங்கினார்.

அவர் சூரிய பகவானுக்கு முதுகுப் புறத்தைக் காட்டியபடி பயணித்தார். மேலும் சூரியனிடமிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டார்.

இறைவன் அனுமானின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை?

இறைவன் அனுமன் தனது கல்வியைக் கற்று முடித்த பிறகு, தனது குருவான சூரிய பகவானிடம், குருதட்சணையாக என்ன வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு சூரிய பகவான் குருதட்சணை எதுவும் வேண்டாம் தனது மகனான சனி தேவனின் கர்வத்தை அழிக்குமாறு அனுமானைக் கேட்டுக் கொண்டார்.

இறைவன் அனுமன் சனி லோகத்திற்கு சென்று, சனி தேவனைப் பார்த்து அவரது வழிகளைத் திருத்திக் கொள்ளும்படி கூரினாா்.

ஆனால் சனி தேவனோ கோபம் கொண்டு, தனது முழு பலத்தையும் கொண்டு, இறைவன் அனுமானின் தோளின் மீது தாவி ஏறி அவரை தாக்க முயற்சித்தார்.

அகவே இறைவன் அனுமன் தனது உருவத்தை மிகப் பெரியதாக மாற்றி கொள்ளத் தொடங்கினார்.

அனுமன் தனது உருவத்தை மிகப்பெரிய உருவமாக மாற்றிய பிறகு, தோளிலிருந்த சனி பகவனை மேற்கூரையில் இடித்து நசுக்கினார். அது அவருக்கு வலியை ஏற்படுத்தியது.

ஆகவே யாராலும் தப்பிக்க முடியாததாகக் இருந்த சனி தேவனின் கர்வம் உடைந்தது.

சனி பகவான் இறைவன் அனுமானிடம் மன்னிப்புக் கோரி, தனது சக்திகளால் அனுமனின் பக்தர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை என்ற வரத்தை அளித்தார்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: மயில்ராஜ்

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: அனுமன் பக்தர்களை சனி பகவான் ஏன் பாதிப்பதில்லை?

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares