பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, புர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர; யாருமில்லை.
சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அந்த சனிபகவான் உங்களுக்கு தரும் பலன்களை காண்போம்!…
1 மற்றும் 2 ஆகிய லக்கனத்தில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும்.
2ஆம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள், வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
3ஆம் வீட்டில் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி, தைரியம், துணிவு, தாராளமான பண வரவுகள் உண்டாகும்.
4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7-ல் சஞ்சரிப்பதை கண்டக சனி என்றும் கூறுவார்கள். மேலும் இந்த காலகட்டத்தில் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள், சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.
5ஆம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம், பூர்வீக தோஷம் மற்றும் தத்து புத்திர யோகம் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.
6ஆம் வீட்டில் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம், வலிமையான வாழ்க்கை, வாழும் அமைப்பு மற்றும் எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்புகளும் உண்டாகும்.
7ஆம் வீட்டில் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன் வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.
8ஆம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் கண்டம் மற்றும் கண்களில் பாதிப்பு உண்டாகும். அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.
9ஆம் வீட்டில் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.
10ஆம் வீட்டில் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும்.
11ஆம் வீட்டில் இருந்தால் நோயற்ற வாழ்வு, எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.
12ஆம் வீட்டில் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள் ஏற்படும்.
சனி திசை தரும் பலன்கள் 1 முதல் 12 வரை இவைகளை பற்றி நன்கு புரிந்து கொள்ளளாம்.