அருள்மிகு சிவன்மலை சுப்பிரமணியர் திருக்கோவில் – காங்கேயம் சிறப்புகள்
தல வரலாறு:
சிவன்மலை சுப்பிரமணியர் கோவில், தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்துக்கு அருகிலுள்ள சிவன்மலையில் அமைந்துள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில் ஆகும்.
மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பட்டாலி என்ற கிராமமே சிவன்மலை அமைந்துள்ள பகுதியாகும்.
பால்வளம் மிக்க வனத்தில் கோவில் கொண்டுள்ள நல்ல மங்கை உடனமர் சிரவனீஸ்வரர் மகனே, சிவன்மலை சுப்ரமணிய சுவாமி.
மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, இங்கு முருகன் குடியேறியதாகவும், சிவன் திரிபுரத்தை அழிக்க மேருமலையை வில்லாகப் பயன்படுத்தியபோது அதிலிருந்து சிதறிய ஒரு சிறுபகுதியே சிவன்மலை எனப்படுகிறது.
பார்வதி மற்றும் அகத்தியர் சிவனை நோக்கித் தவம் செய்த தலம் என்றும், வள்ளிமலைக்குச் சென்று வள்ளியை மணம்முடித்த முருகன் வள்ளியுடன் இங்கு திரும்பி வந்து குடிகொண்டதாகவும் தல வரலாறு கூறுகிறது.
அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார்.
திருத்தலக் குறிப்பு:
தல இறைவன் : சுப்ரமணிய சுவாமி.
தல இறைவி:வள்ளி, தெய்வானை.
தல விருட்சம் : தொரட்டி மரம்.
தல தீர்த்தம் : காசி தீர்த்தம்.
திருவிழாக்கள்: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
உத்தரவு பெட்டி :
சிவன்மலை கோவில் சிறப்புகளில், பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும்.
மனிதர்களுக்கு ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால், மூலவருக்கு காரண மூர்த்தி என்ற பெயர் உள்ளது.
சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து, தனக்கு இன்ன பொருளை வைத்து பூஜை செய்யுமாறு கூறுவார்.
அதன்படி, சுவாமியிடம் உத்தரவு கேட்கப்பட்டு, உத்தரவானதும் குறிப்பிட்ட பொருள் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.
இன்னொரு பக்தரின் கனவில் வந்து அடுத்த பொருளை சுட்டிக்காட்டும் வரை, பழைய பொருளே கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
பிரார்த்தனை :
திருமணத் தடை, குழந்தை பாக்கியம், தொழில் மேன்மை, நோய் பாதிப்பு என அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் அற்புதமலையாக விளங்குகிறது.
நவக்கிரக சன்னதியை, ஒன்பது முறை சுற்றி, வழிபட்டு வந்தால் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம்.
சனி பகவான் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளார்.
மலை மேல், சுரலோக நாயகி சமேத ஜூரஹரேசுவரர் எழுந்தருளியுள்ளார். காய்ச்சல் வந்தவர்கள் மிளகு ரசம் வைத்து, இங்கு வந்து பு+ஜை செய்து உண்டால், காய்ச்சல் நீங்கும் என்ற ஐதீகம் உள்ளது.
தலச் சிறப்பு :
மற்ற திருத்தலங்கள் போலன்றி இங்கு முதல் வழிபாடு முருகப்பெருமானுக்கே.
மற்ற திருத்தலங்களில் முதல் வழிபாடு பிள்ளையாருக்கே.
நவக்கிரகங்கள் அனைத்தும் சூரியபகவானைப் பார்த்து நிற்கின்றன.
அணையாத தீபம் எரிந்து கொண்டுள்ளது சிறப்பாகும்.
திருநள்ளாறு சென்று சனீஸ்வரனை தரிசிப்பதும், சூரிய நாராயணர் கோவில் சென்று சூரியனை வழிபடுவதால் ஏற்படும் சிறப்பும் இங்கு கிடைக்கும்.
முக்கிய விபரங்கள்: | |
Official Website | Click here to open link in new tab |
Route Map | Click here to link open in new tab |
Pooja Timings | |
Vizha Pooja | 06:00am IST |
Kala Shanthi Pooja | 09:00am IST |
Uchi Kaala (Afternoon) Pooja | 12:00pm IST |
Sayaratchai (Evening) Pooja | 06:00pm IST |
Arthajama Pooja | 08:00pm IST |
Fees Details | |
Archanai Ticket | Rs. 3.00 |
Coconut Ticket | Rs. 2.00 |
Ear Boring | Rs. 50.00 |
Abisekam | Rs. 50.00 |
Sakasranamam 1008 Namam | Rs. 20.00 |
Thirusathai | Rs. 10.00 |
Shanthi | Rs. 75.00 |
Potli | Rs. 10.00 |
Marriage | Rs. 500.00 |
Two Wheeler Pooja | Rs. 10.00 |
Four Wheeler Pooja | Rs. 50.00 |
Two Wheeler Entry | Rs. 05.00 |
Four Wheeler Entry | Rs. 20.00 |
Commercial Vehicle Entry | Rs. 100.00 |
Kaala Pooja | Rs. 25.00 |
Special Entrance | Rs. 25.00 |
Special Entrance (Function Time) | Rs. 50.00 |
Thank u for so much information in Ur website…. I expect more and more good works from u and Ur team
Its our pleasure to receive a compliment from you. Keep supporting us in future.