தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்!

பதிவேற்றம் செய்த நாள் March 5, 2022   |   ஆசிரியர் மயில்ராஜ்

0 கருத்துக்கள்

எவ்வகை தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்.

தானத்தின் அடையாளமாய் இருந்தவர் கர்ணன். இவர் வாழ்ந்த காலத்தில் தன் உயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்தவர்.

தானம் என்பதை பற்றி உலகிற்குக் காட்டியவர் கர்ணன். தானம் செய்வது இறைவன் கர்ணன் நமக்குக் கொடுத்த மிக பெரிய வாய்ப்பு!

தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்

நாம் வாழும் நாட்களில் ரத்த தானம், கண் தானம், மற்றும் உடல் உறுப்பு தானம் என பல தானங்கள் உள்ளன. தானம் செய்வது அவரவர் விருப்பம்.

தானம் செய்வதற்கு நம்முடைய உடலை பாதுகாப்பாக வைக்க வேண்டும். அவரவர் மனதையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

ஆனால் மேல் கூறிய தானங்கள் தவிர பிற தானங்கள் செய்வதால் நிறைய பலன் கிடைக்கும். அவற்றை இங்கு பாப்போம்.

தானங்களும் அதன் புண்ணிய காலமும்

மனிதர்கள் நிகழ் காலத்தில் துன்பம், இன்பம், மகிழ்ச்சி என வாழ்கின்றனர். இல்லாதவர்களுக்கு தானம் செய்வது மிகவும் நன்மை.

என்ன தவறு செய்தாலும், பாவம் செய்தாலும் தானம் செய்தால் புண்ணியம் சேர்க்கலாம். ஆகவே நம் பொியோர்கள் நமக்கு சொத்து சேர்ப்பதை விட புண்ணியம் சேர்க்க வேண்டும் என கருதினார்.

முன்பு அரசர் காலத்தில் வரலாறு, புராணம் மற்றும் இலக்கியங்களின் மூலம் தானம் செய்வதை காணலாம். ஏதோ ஒரு தானம் செய்தால் அவரது தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

இங்கே நாம் செய்யும் தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் என்பதை பார்ப்போம்.

  1. மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வதால் 6 தலைமுறைக்கு புண்ணியம்.
  2. திருக்கோவிலில் தீபம் ஏற்றி வந்தால் 5  தலைமுறைக்கு புண்ணியம்.
  3. பட்டினியால் வருந்தும் குழந்தை மற்றும் பெரியவர்களுக்கு உணவளித்தல், ஏழைபெண்களுக்கு திருமணம் செய்வதன் மூலம் 8 தலைமுறை புண்ணியம்.
  4. பித்ருக்களுக்கு உதவி செய்தால் 6 தலைமுறைக்கு புண்ணியம்.
  5. அனாதையாக இறந்தவர்களுக்கு அந்நிம கிரியை செய்தால்  9 தலைமுறைக்கு புண்ணியம்.
  6. நம்முடை முன்னோர்களுக்கு திதி பூஜை செய்தால் 21 தலைமுறைக்கு புண்ணியம்.
  7. பசுவின் உயிரை காப்பது 14 தலைமுறைக்கு புண்ணியம்.

என்ன தானம் செய்தால் என்ன பலன்?

தானம் என்பது தனக்கே இல்லாத நிலை வரும் வரை தருவது மட்டுமே, தானம்..!

தீப தானம்:

நமக்கு இஷ்ட தெய்வ திரு ஆலயங்களின் மாதம் ஒரு முறை  10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.

திருகோவில்களுக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தினால் பார்வைதிறன் பாதுகாப்பாகும்.

நெய் தானம்:

பாவக்கிரக திசை நடப்பவர்கள், நோய் தொல்லையில் அவதிபடுவார்கள், வெள்ளி கிண்ணத்தில் நெய் தானம் செய்து வந்தால். அனைத்து விதமான நோய்களும் விடுபடும்.

ஆடைகள் தானம்:

பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்மை. ஆயுள் குறைவது மற்றும் குழந்தை இறந்துவிடுவது இதில் இருந்து விடுபடலாம்.

வியாழக்கிழமை அன்று ஆடைதானம் செய்தால் பெண்களுக்கு உடல் வலிமைகள் தரும், தோஷம் விலகும்.

தேன் தானம்:

புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாமல் இருப்பவர்கள் வெள்ளி பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று சுத்தமான தேனை தானம் செய்து வரவேண்டும்.

அரிசி தானம்:

முன்னோர்கள் ஜென்ம தோஷங்கள் மற்றும் பாவங்கள் விலகுவதற்கு ஏழை அல்லது வீடு வாசல் இல்லாதவற்களுக்கு அரிசி தானம் செய்ய வேண்டும்.

கம்பளி-பருத்தி தானம்:

வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு மற்றும் வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்தி உடை, கம்பளி உடை தானம் செய்து வந்தால் அதிலிருந்து மீண்டு விடலாம்.

0Shares

கட்டுரை ஆசிரியர்: மயில்ராஜ்

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: தானங்கள் எத்தனை தலைமுறைக்கு புண்ணியம் சேர்க்கும்!

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares