ஜோதிடர்களிடையே இப்போது சுவாரஸ்யமாக நடைபெறும் பேச்சு திருவிழா போட்டியில் திருமணம் செய்வதற்கு 10 நட்சத்திர பொருத்தங்கள் தேவையா அல்லது தேவை இல்லையா என்பதொரு சம்பாஷணை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதில் இது சரி, இது சரியில்லை என்றெல்லாம் கருத்துக்கள் பல இருந்தாலும், அதிலுள்ள அடிப்படை உண்மைகளை தேவையா…? இல்லையா..? என்பதை ஜோதிடத்தை நேசிக்கும் என்னுடைய நண்பர்களுக்கு அவர்களுக்கு தெரிந்த விஷயங்களையே சிலவற்றை சுட்டிக்காட்டவே இந்த தொடர் கட்டுரை.
தவறு – சரி என்பதெல்லாம் அவரவர் முடிவைப்பொறுத்தது. திருமணம் என்பது மனித வாழ்வில் ஆண் பெண் ஆகிய இருவரும் இணைந்து உடல் உறவு கொண்டு சந்ததி வளர்ச்சி பெற்று வாழ்க்கையின் கடமைகளை செய்ய சமுதாய அங்கீகாரம் உரிமை வழங்குவது தான் என்பதாகும்.
இந்த திருமணம் பந்தம் இல்லாமல் ஆண் பெண் இணைந்து வாழ்வதையோ குழந்தை பெறுவதையோ சட்டம் சமுதாயம் மற்றும் சாஸ்திரமோ ஏற்றுக் கொள்வதில்லை.
திருமணம் என்ற புனிதமான நிகழ்வானது சாஸ்திர முறைப்படி அவசியம் நடைபெறுதல் வேண்டும் என்பதாகும்.
ஒருவர் சாஸ்திர முறைப்படி திருமணம் செய்து கொண்டு குடும்பஸ்தர் ஆகி மனைவியுடன் உள்ள ஆணுக்குத்தான் மேற்படி வேதத்தின் அடிப்படையிலான அனைத்து கர்மாக்களை சாஸ்திரப்படி செய்யும் தகுதி உண்டு.
திருமணம் என்ற பந்தம் சம்பிரதாய சடங்குகளின் படியோ சட்டத்தின் படியோ ஏற்படாமல் ஆண் பெண் இருபாலரும் இணைந்து வாழ்வதை சமுதாயம் மட்டுமல்லாமல் சாஸ்திரமும் கணவன் மனைவி என்று ஏற்றுக் கொள்வதில்லை.
அந்தப் பெண்ணை வைப்பாட்டி என்றும், மேலும் அந்தப் பெண் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சமுதாயமோ சட்டமோ முறையான வாரிசு உரிமையோ சொத்து உரிமையோ அளிப்பதில்லை.
ஆகவே முறைப்படி திருமணம் செய்து கர்மம் செய்வதற்கு புத்திரன் இல்லாதவன் பேரின்ப வீடான மோட்சத்தை அடைய முடியாமல் புத் என்ற நரகத்தில் வீழ்வான்.
மேலும் முறைப்படி திருமணம் செய்து ஒரு பெண்ணை பெற்றெடுத்து அதை ஒரு ஆடவனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்தால்தான் புண்ணியம் என்று சாஸ்திரம் கூறுகிறது.
ஆகவே குடும்பஸ்தர் வம்ச விருத்திக்காகவும் கன்னிகா தானத்துக்காகவும் பிள்ளைகளை பெறுவதுடன் வேத தர்மத்தை காப்பதற்காக ஹோம யாகங்கள் செய்வதுடன், பிதுர் கடன், தேவ கடன், குரு அல்லது ரிஷி கடன், அரசு கடன், நாட்டு கடன் போன்ற நித்திய ஷோடசகர்மாக்களையும் செய்வதற்கு அவனுக்கு மனைவி துணையாக இருக்க வேண்டும்.
அப்போது தான் குடும்பஸ்தர் என்ற அந்தஸ்து பெற்று மேற்படி நித்திய கர்மாக்களை செய்ய முடியும்!!
மனைவி!!
ஒரு மனிதனின் வாழ்வில் இன்ப துன்பங்களை சரி பாதியாக ஏற்றுக் கொள்ள வரும் மனைவி எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதை வரையறுத்து வேத சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது.
- மனைவியானவள் கணவனுக்கு ஏற்ற ஜோடியாகவும் நல்ல குடும்பத்தில் பிறந்தவளாகவும் கல்வியறிவு உள்ளவளாகவும் திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ள சரீரம் உடையவளாகவும்,
- அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நால்வகை குணம் நிரம்பியவளாகவும்,
- தொற்று நோய் எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான பிள்ளைகளை பெற்றுக் கொடுப்பவளாகவும்,
- கணவனை விட வயதில் குறைந்தவளாகவும், சரீர குறைகள் இல்லாதவளாகவும்,
- கணவனுக்கு அடங்கி நடப்பதுடன், குடும்பத்தை நடத்துவதில் முழு மனதுடன் ஒத்துழைப்பு அளிப்பவளாகவும்,
- நமது குல ஆசாரங்களையும், பண்பையும், கற்பையும், பூஜை புணஸ்காரங்களை நிலை நிறுத்துபவளாகவும்,
- கணவனுக்கு அறிவுரை வழங்குவதில் ஒரு மந்திரி போலவும், வேலை செய்வதில் வேலைக்காரி போலவும்,
- அழகில் மகாலட்சுமி போலவும், பொறுமையில் பூமாதேவி போலவும்,
- சயன சுகம் எனும் உடல் உறவு சுகம் அளிப்பதில் தாசியைப் போல் இருப்பவளாகவும் இருக்க வேண்டும்,
என்பதை சாஸ்திரம் சொல்கிறது.
மேலும் எப்படிப்பட்டவள் மனைவியாக வரத்தகுதியற்றவள் என்பதையும் சாஸ்திரம் சொல்கிறது.
- வேதம் படித்த குடும்ப புரோகிதர் மற்றும் குருவின் மகள்,
- தனக்கு வித்தை சொல்லிக் கொடுத்தவள்,
- தாயும் தந்தையும் வெவ்வேறு குலத்தைச் சேர்ந்தவர்களின் பெண்,
- 11 வயதுக்கு குறைந்த பெண், 52 வயதுக்கு மேற்பட்ட வயதுடைய பெண்,
- வியாதி உள்ளவள், கீழினத்தைச் சேர்ந்தவள், பங்காளியின் பெண், சகோதரியின் மகள்,
- சகோதரனின் மகள், மனைவியின் தங்கை, வேலைக்காரி, தனக்கு வைத்தியம் செய்தவள்,
- தாயின் தங்கையான சித்தியின் மகள், மற்றும் தாசி விபச்சாரி
போன்றவர்கள் மனைவியாக தகுதி அற்றவர்கள்.
இந்த காலத்தில் இது சாத்தியமா
இந்த நவீன காலத்தில் மேற்கண்ட அனைத்து அமைப்பிலும் பெண்ணை தேடிக் கண்டுபிடிக்க முடியுமா என்றால் முடியும் என்று முழுமையாக கூறிவிட இயலாது.
ஏதேனும் ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லாமல் இருக்க கூடும் இருப்பதை வைத்து ஒப்பேற்றிக்கொள்ள வேண்டியது தான் என்ற நிலை பெரும்பாலும் காணப்படுகிறது.
அபூர்வமாகவே நல்ல இணைவுகள் ஏற்படுகின்றன. ஆகவே நல்ல குணவதியான ஒரு கன்னிப் பெண்ணை கைப்பிடித்து தர்மம், அர்த்தம், காமம், மோட்சம், ஆகிய நான்கையும் அடைவதற்க்காக சாஸ்திர முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து தர்ம சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
விதவை, விவாகரத்து மறுமணம்
விதவை மறுமணம்
விவாகரத்து மறுமணம்
இந்த அடிப்படையில் நாம் அணுகும்போது சாஸ்திரம் கூறுவது
- இளம் வயதிலேயே கணவன் இறந்து விட்டாலும்,
- உடல் உறவு கொண்டு பெண்ணை கர்ப்பமடைய வைக்கும் ஆண்மை தன்மை இல்லாதவன் கணவனாக இருந்தாலும்,
- கணவன் துறவு பூண்டு சந்நியாசி ஆகிவிட்டாலோ,
- கணவன் கண்காணாமல் போய் தகவலே இல்லாவிட்டாலும்,
- கொடுமையான குற்றங்கள் செய்து ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை பெற்றவனாக இருந்தாலும்
முறைப்படியான சடங்குகள் செய்து திருமண விலக்கு செய்த பின் அந்தப் பெண்ணுக்கு காப்பாளர்கள் பொறுப்பானவர்கள் மறுமணம் விவாகம் செய்து வைக்கலாம்.
விவாகரத்து மறுமணம் எனும்போது,
வரதட்சணை கொடுமை
குழந்தை இல்லாமை
இதன் அடிப்படையில் விவாகரத்து ஆன பெண்ணுக்கு மறுவிவாகம் என்பதை மனுதர்மம் அங்கீகரிக்கிறது.
கருத்து வேறுபாட்டால் விவாகரத்தாகி மறுமணம் என்பதை அநேகமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றே கருதவேண்டி உள்ளது. மேலும் சாஸ்திர நூல்கள் கூறுவதை காண்போம்