மணமகன் – மணமகள் குடும்பத்தினர் வரன், வது இருவரின் ஜாதகத்தை 10 நட்சத்திர பொருத்தங்கள் மற்றும் ஜாதகத்தை ஆய்வு செய்து கொண்டு முறைப்படி செய்யும் திருமணம் 70 சதவிகிதம் ஆகவும்,
வரன் வதுவுக்கு ஜாதகம் இல்லாத நிலையில் பெயர் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்வது 15 சதவிகிதம் ஆகவும்,
எந்த பொருத்தமும் பாராமல் மணப் பொருத்தம் மட்டும் அதாவது ஆண் பெண் பெற்றோர்கள் முடிவு செய்து அதன் அடிப்படையில் நடைபெறும் திருமணம் 15 சதவிகிதம் ஆகவும்,
இன்றைய காலகட்டத்தில் நடைபெறுகிறது என்று தோராயமாக கூறலாம்.
திருமண பொருத்தம் பார்க்கும் முறை எப்போது துவங்கியது
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திருமணம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து வந்துள்ளார்கள். வடநாட்டில் 1894 முதல் திருமண பொருத்தம் பார்த்து திருமண செய்து வந்துள்ளார்கள்.
காளிதாசர் எழுதிய ஜாதக சந்திரிகா என்னும் நூலிலிருந்து திருமண பொருத்தம் பார்க்கப்பட்டது. தமிழ் நாட்டில் கால பிரகாசிகா என்ற வடமொழி நூலை தமிழுக்கு 1924 ல் மொழி பெயர்த்து அதிலிருந்த திருமண பொருத்தத்தை பார்த்து திருமணம் செய்ய தொடங்கினார்கள்.
1964 ல் இருந்துதான் முழுமையான திருமண பொருத்தம் தமிழகத்தில் பார்க்கப்படுகிறது.
- அன்றைய காலகட்டத்தில் அதிகம் பேருக்கு ஜாதகம் இல்லாத நிலையில் முதலில் பெயரின் முதல் எழுத்தை வைத்து நட்சத்திரத்தின் அடிப்படையில் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டது.
- பிறகுதான் பிறந்த நட்சத்திரத்தை வைத்து திருமண பொருத்தம் பார்க்கப்பட்டது.
- அதன்பிறகு பெண்ணின் நட்சத்திரத்தை முதலில் வைத்து திருமணம் பொருத்தம் பார்க்கப்படுகிறது.
முகூர்த்தம் தொடர்பான மூல நூல்கள் 56 க்கும் மேற்பட்டு உள்ளது.
அந்த நூல்களின் அடிப்படையில் பஞ்சாங்கத்தில் சில சற்று முரணான வகைகளில் திருமண பொருத்தம் அளித்துள்ளார்கள்.
இதனை பல்கலை கழகங்கள் தங்களது ஜோதிட பாடங்களில் மூலநூல்களை ஆய்வு செய்து சரியான சிறப்பானதான பாடதிட்டத்தை அளித்துள்ளார்கள்.
முகூர்த்தம் தொடர்பான நூல்கள்!
- அற்புத சாகரம்
- ப்ருஹன் சாரதா
- ப்ருஹத் தெய்வக்ஞரத்னா
- ப்ருஹத் ஜோதி சாரம்
- தெய்வக்ஞ மனோரஞ்சிதம்
- தெய்வக்ஞ மனோரத கிரந்தம்
- கணக பந்தனம்
- இந்து முகூர்த்த ஜோதிடம்
- ஞான மஞ்சரி
- ஜகன் மோகன் கிரந்தம்
- ஜோதி பிரகாசம்
- ஜோதிர் நிபந்தம்
- ஜோதிட ரத்னா
- ஜோதிட சாரம்
- ஜோதிட சிந்தாமணி
- ஜோதிர் விதாபரணம்
- கால கண்டம்
- கால நிர்ணய தீபிகை
- மாதவீயம்
- கால பிரகாசிகை
- முகூர்த்தார்ணவம்
- மூகூர்த்த பாஸ்கரம்
- முகூர்த்த சிந்தாமணி
- முகூர்த்த சூடாமணி
- முகூர்த்த தர்ப்பணம்
- முகூர்த்த தீபகம்
- முகூர்த்த கண்மதி
- முகூர்த்த கல்பத்ரயம்
- முகூர்த்த மாலா
- முகூர்த்த தீபிகை
- முகூர்த்த மஞ்சரி
- முகூர்த்த மார்த்தாண்டம்
- முகூர்த்த முக்தாவளி
- முகூர்த்த பிரகாசம்
- முகூர்த்த பதவி
- முகூர்த்த சாகரம்
- முகூர்த்த சக்கரம்
- முகூர்த்த தத்துவம்
- முகூர்த்த தத்துவம் பிரதீபன்
- முக்தாவளி
- பாரதியும்
- நிபந்த சூடாமணி
- நற்பதிஜாச்சார்ய சர்வோதயா
- பூர்வ காலாமிருதம்
- ராஜ மார்த்தாண்டம்
- ரத்தின கடாக்ஷம்
- ரத்தின மாலா
- சகுஜாரம்
- சிவஸ்வரோதயம்
- விவாஹப்ரதீபம்
- விவாஹ குதுகலம்
- விவாஹ படலம்
- வியவஹார சாரம்
- விவாக விருத்தாசலம்
- விவாக ஆரோக்கியம்
- யோக யாத்திரை
மேற்கண்டவாறு நூல்களில் கூறப்பட்டுள்ள நட்சத்திர பொருத்தம் மட்டுமே முன்னாளில் பார்த்து சடாரென கூடி பேசி திருமணங்கள் முடிவு செய்யப்பட்டன.
ஆனால் இப்போது ஏகப்பட்ட விதிமுறைகள் உருவாகி 100 ஜாதகங்கள் வந்தாலும் ஒன்றுக்கொன்று சரிவராமல் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்ய வேண்டுமா என்ற கேள்வியில் பெற்றோரும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.
ஜோதிடர்களும் ஒருவருக்கொருவர் ஒரு விதிமுறைகளை உருவாக்கி வைத்துக் கொண்டு உறுதியாக எதையும் கூறாமல் பரிதவித்து போகிறார்கள்.
ஆமாம் உண்மையில் திருமணப்பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்ய வேண்டுமா? தொடர்ந்து காண்போம்.