உங்கள் வீடுகளில் பணமும் அதிர்ஷ்டமும் பெருக சில வழிகள்!

பதிவேற்றம் செய்த நாள் November 27, 2021   |   ஆசிரியர் மயில்ராஜ்

0 கருத்துக்கள்

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் பணமும், சகல ஐஸ்வர்யமும் பெருக செய்ய வோண்டியவைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது

பணமும் அதிர்ஷ்டமும் பெருக சில வழிகள்!

உங்கள் வீடுகளில் பணமும் அதிர்ஷ்டமும் பெருக, பணமும் அதிர்ஷ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட வேண்டுமா? எளிமையாக கடைபிடிக்க வேண்டிய சில ரகசியங்கள் :

வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம் ஆகும். இந்த வாஸ்துவை அனைவரும் சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உங்கள் வீடுகளில் பணமும் அதிர்ஷ்டமும்

உங்கள் அனைவரின் கையிலும் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டும் என்றால் நீங்கள் தூங்கும் போது மேற்கு திசையை நோக்கி தலை வைத்து படுக்க வேண்டும்.

எவ்வளவு கஷ்டப்பட்டாலும் வேலை செய்தாலும், உங்களின் உழைப்பிற்கு ஏற்ப ஊதியம் கிடைக்காமல் வேதனைகள் மட்டுமே படும் நீங்கள் இந்த வழிகளை பின்பற்றினால் நிறைய பயன்பெறும் வாய்ப்புகள் உள்ளது.

பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளும் தருணங்களில் சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அல்லது இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்புகளும் உண்டு.

வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருப்பது ஒரு சாதாரண நிகழ்வாகும். இதை போன்ற நிகழ்வுகள் இருக்கும் வீடுகளில் செலவுகள் அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.

எந்த ஒரு தருணத்திலும் வடக்குதிசை நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்க்கவும். ஏனெனில் வடக்குதிசை தலை வைத்து படுப்பவர்களிடம் அதிக சோம்பல்கள் குடிகொள்ளும், மேலும் சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும்.

உங்கள் வீட்டில் சில்லறை காசுகளை ஒரு பாத்திரம் அல்லது பானையில் நிரப்பி அதன் மேல் பாகத்தை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் யாருடைய பார்வைக்கும் தெரியாதவாறு வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.

வீட்டில் சாப்பிடும் அறையில் உள்ள மேஜையின் மீது உள்ள பொருள்கள் தெரியும் படி ஒரு வட்ட வடிவிலான பிரேம் போட்ட கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இது மேலும் சிறப்பாகும்.

வீட்டின் தென்கிழக்கு பகுதியில் 9 மீன்கள் (8 சிவப்பு அல்லது பொன்நிறம் கொண்ட கோல்பிஷ் மீன்களும், 1 கருப்பு நிற மீனும்) இருக்கும் படி வையுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஷ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்.

உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா?

வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி பொருள்கள் இருப்பதே வீட்டில் செல்வம் நிலைக்காமலே செல்ல காரணம் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும்.

வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. ஏனெனில் இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.

வீட்டில் ஏதேனும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும். ஏனெனில் அவை நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உண்டாக்குகிறது.

உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது. இவைகள் பொருளாதார பிரச்சனைகளை உண்டாக்கும்.

முள்கள் இருக்கும் செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளியில் வைக்க வேண்டும். இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

நமது வீட்டில் பயன்படாத கடிகாரத்தை சுவற்றில் தொங்க விடாமல் அதை வெளியில் போட்டு விட வேண்டும். ஏனெனில் அந்த கடிகாரமானது நமது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, செல்வ வளத்தைப் பாதிக்கச் செய்கிறது.

0Shares

கட்டுரை ஆசிரியர்: மயில்ராஜ்

Hey, I am Myilraj G, from Tamil-Nadu India. The decision I made on 31-DEC-2015, has entirely changed my life from a novice office going guy into a successful entrepreneur. Blogging was my passion and life becomes enjoyable. Get here to know more about me.

மேலும் சில பதிவுகள் பார்க்க

0 கருத்துரை பதிவு உள்ளது: உங்கள் வீடுகளில் பணமும் அதிர்ஷ்டமும் பெருக சில வழிகள்!

Leave a Reply



Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}
0Shares