வரலாறு
வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் முள்ளங்காடு எனும் கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் ஜீவ சமாதி அடைந்த, திரு சுவாமி சங்கரானந்த அவர்களிடம் தீட்சை பெற்ற ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகள் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
கோயம்புத்தூரிலிருந்து to பூண்டி செல்லும் வழியில் 30 km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் என்னும் இடத்தில் காட்டுக்குள் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதி உள்ளது. ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஆஸ்ரமம் என்ற பெயருடன் இயற்கை சூழ அமைத்துள்ளது.
ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் குரு ஆவார்.
சத்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகள்
வெள்ளிங்கிரி சுவாமி அவர்கள் 1938 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் சின்னகொல்லப்பட்டியில் திரு.சின்னபையாகவுண்டர். திருமதி.பச்சியம்மாள் ஆகியோருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தவர். தன் இளமை பருவத்திலேயே 9 தாவது வயதில் ஆன்மிக வேட்க்கையின் காரணமாக தன் இல் உலக வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்து ஆன்மிக உலகில் தனக்கென்ற பாதையை வகுத்துக்கொண்டார்.
திரு சுவாமி சங்கரானந்த அவர்களிடம் தீட்சை பெற்று சங்கராஷ்ரமத்தில் தன் குருவிற்கு பணிவிடை செய்வதோடு தன் தபநிலையயும் உயர்த்திகொண்டார். சுமார் 10 ஆண்டு காலம் அங்கு இருந்தார். காலம் செல்ல செல்ல குருவின் அனுமதியோடு வடமாநில யாத்திரை மேற்கொண்டார்.
பின் 1960 களில் மீண்டும் தமிழகம் வந்தார். அதன் பின் வெள்ளிங்கிரி மலைசாரலில் உள்ள சீீங்கப்பதி என்ற கிரமத்தில் சிறிய ஓலைகுடிசையில் தங்கி தன்னை நாடி வருபவர்களுக்கு சித்தவித்தை என்ற தப வாழ்க்கையை பயிற்றுவித்ததோடு மருத்துவம், இரசவாதம், யோகாசனம், அறியவகை மூலிகை பற்றியும் கற்று கொடுத்ததோடு மூலிகைகளையும் உற்பத்தி செய்துள்ளார்.
சில காலத்திற்க்குப் பிறகு முள்ளங்காடு என்ற சிறிய கிராமத்தில் தவகுடில் அமைத்து தன் தவ வாழ்வை மேற்கொண்டார். மார்கழி மாதம் கடுமையான பனிக்காலத்தில் வெள்ளிங்கிரி மலையின் மேலுள்ள கிருஷ்ணகுகையில் மௌன விரதத்துடன் கூடிய உண்ணாவிரதம் இருந்து நாள் ஒன்றுக்கு ஒரு பாசிப்பயிறு மாவு உருண்டை வீதம் உண்டு உடலை பாதுகாத்து உயிரை வளர்த்து வந்தார்.
பின் 20 ஆண்டுகள் களித்து அருகில் உள்ள முள்ளங்காடு எனும் கிராமத்திற்கு வந்தடைந்தார். அணைத்து சித்துகளும் கைகூடியிருந்த போதும் தன்னை விளம்பர படுத்தவில்லை. அதே எளிமையுடன் தனது ஸ்தூல உடல் வாழ்க்கையின் ஓட்டத்தை 21-02-1986 ஆம் ஆண்டு நிறுத்தி பரத்தில் தன்னை ஒடுக்கிக்கொள்வதை தன்னுடைய முக்கிய சீடர்களிடம் ஓராண்டுக்கு முன்பே கூறினார்.
இன்றுவரையிலும் கூட அவர் சூட்சும தேகத்தில் உலவுவதும், ஒருசிலருக்கு நேரடியாக தரிசனம் தந்துள்ளதும் அவர் அவர் அறிந்த உண்மையே. இன்றும் அவரை தரிசிக்கவரும் பக்தர்களின் குறைகள் நிறைவடைந்துள்ளது என்பது தின்னமே.
விஷேச நாட்கள்
பௌர்ணமி அன்று இரவு தங்கி தியானம் செய்ய ( ஆண்கள் மட்டும் ) அனுமதி உண்டு. நீங்கள் காரில் சென்றால் சுமார் 0.7 km முன்பே காரை நிறுத்திவிட்டு ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும்.யானைகளின் நடமாட்டம் உள்ள இடம்.
ஆசிரமம் அமைவிடம்
கோவையிலிருந்து பூண்டி செல்லும் வழியில் முள்ளங்காடு என்று கிராமத்தின் அருகில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது. வாகனங்களில் செல்ல இயலாது (வனவிலங்குகளின் தொல்லை இருப்பதால் உங்கள் வாகனத்தின் நலன் கருதி கிராமத்தில் நிறுத்திவிட்டு செல்லலாம்). முள்ளங்காடு கிராமத்தில் நிறுத்திவிட்டு 0.7கிம் நடந்து செல்ல வேண்டும்.
கூகிள் மேப் வரைபடம்
ஆசிரமத்தில் நாம் கடைபிடிக்கவேண்டியவை
இங்கு வந்து சுவாமிகளின் சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்யலாம். அப்படி செய்யும் போது நம் உடலின் மூச்சுக்காற்றின் வேகத்தை வெள்ளிங்கிரி சுவாமிகள் சரி செய்து தருவதாக பயன் பெற்றவர்கள் கூறி உள்ளனர். மேலும் சித்தர்கள் தாங்கள் செய்யும் மருந்துகளில் சந்தேகம் இருந்தால் இங்கு வந்து தியானம் செய்கிறார்கள். அப்படி செய்யும் போது அவர்களின் சந்தேகங்களை வெள்ளிங்கிரி சுவாமிகளே தீர்த்து வைப்பதாகவும் சொல்கிறார்கள்.
சித்தர்கள் இன்றும் நம்முடன் வாழ்கிறார்கள் என்பது உண்மையே.
ஓம் நமசிவாய!
Super very useful.
Thank You for your valuable comment Senthil Bro! Keep Support us.